திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள்
1. சித்திரை திருவிழா
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று புண்ணிய பூமி எழுமலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி ( பெருமாள்) எழுந்தருளல் புரிந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கருடாழ்வார் வாகனத்தில் பக்தர்களுக்கு அருபாளிக்க புறப்படுவார். ஒவ்வொரு மண்டக படியிலும் அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமியை வரவேற்று, பூஜைகள் நடைபெறும். அதே நாளில் அருள்மிகு ஸ்ரீ மாதந்திர சுப்பிரமணியரும் மயில் வாகனத்தில் நகர்வலம் வருவார். சித்ரா பௌர்ணமி அன்றிரவு அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமியும், அருள்மிகு ஸ்ரீ மாதந்திர சுப்பிரமணியரும் பக்தர்களுக்காக மண்டகப்படியில் தங்கி அருள்புரிவர். மறுநாள் காலையில் இரு சுவாமிகளும் வானவேடிக்கையுடன் பறப்பட்டு எதிர்சேவை நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். பிறகு அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி ரதவீதி வழி மண்டகப்படியில் எழுந்தருளி ஆலயம் வந்தடைவார். திருக்கோவில் தேவஸ்தானம் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
2. புரட்டாசி திருவிழா
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி உற்சவர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கருடாழ்வார் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருக்கோவில் தேவஸ்தானம் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
3. மார்கழி மாத வழிபாடு
ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாள்தோறும் அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு திருக்கோவில் தேவஸ்தானம் சார்பாக மாதம் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
4. வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதம் வளர்பிறை அன்று வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருக்கோவில் தேவஸ்தானம் சார்பாக பரமபத வாசலுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு "சொர்க்க வாசல்" திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும். திருக்கோவில் தேவஸ்தானம் சார்பாகபக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அன்று அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி உற்சவர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு யானை வாகனத்தின் மீது சுவாமி எழுந்தருளல் செய்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க இரவு ஊர்வலமாக புறப்படுவார். வைகுண்ட ஏகாதசி அன்றிரவு அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி பக்தர்களுக்காக மண்டகப்படியில் தங்கி அருள்புரிவார். பக்தர்கள் விடிய விடிய விரதமிருந்து அதிகாலையில் திருக்கோவிலில் சுவாமியை வழிபடுவார்கள்.
5. உரியடி உற்சவம்
6. கிருஷ்ண ஜெயந்தி
7.அனுமன் ஜெயந்தி
Comments
Post a Comment